அமைச்சர்ஆன்மீகம்செய்திகள்

துவரிமான், சக்தி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா | அன்னதானத்தை துவக்கிவைத்தார் செல்லூர் ராஜூ

Duvariman, Shakti Mariamman Temple Dance Festival | Sellur Raju inaugurated the food donation

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட துவரிமான் மேலத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா சென்ற வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள் காப்பு கட்டி விரதம் இருந்து திருவிழாவின் தொடர்ச்சியாக, இன்று காலை கோவில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதானத்தை, முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செல்லூர் ராஜு அவர்கள் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துவரிமான் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும்அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: