செய்திகள்புகார்மாநகராட்சி

துர்நாற்றத்தில் தவிக்கும் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் | நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்குமா மாநகராட்சி

Maduthavani flower market suffering from stench Can the Corporation protect the public from disease?

மதுரையில் பிரதான பூ மார்க்கெட் ஆன மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பல ஆயிரம் கிலோ பூக்கள் கொண்டு வந்து இங்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் பூக்களை இங்கே வாங்கி செல்கிறார்கள். மேலும், கழிவு பூக்கள் அனைத்தும் மொத்தமாக குப்பையில் ஓரமாக கொட்டப்படுகிறது.

கடந்த மூன்று நான்கு நாட்களுக்கு மேலாக அழகிய பூக்கள் அகற்றப்படாத காரணத்தினாலும், மழை பெய்த காரணத்தினாலோ துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என, வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளும் பலமுறை தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள், பூக்களின் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகளும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே மாநகராட்சி இதனை உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்தால், பூ மார்க்கெட் மணக்கும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
14
+1
0
+1
0
+1
0
+1
0
+1
35
+1
15

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: