அமைச்சர்செய்திகள்

தும்பைப்பட்டி & ஒத்தக்கடை | ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் | துணை வேளாண்மை விரிவாக்க மைய சேமிப்பு கிட்டங்கிகள் | அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்

Oththakadai | At an estimated cost of Rs. 40 lakhs | Subsidiary Agricultural Extension Center Storage Warehouses | Minister P. Murthy started

துரை மாவட்டம், மேலூர் வட்டம் தும்பைப்பட்டி மற்றும் மதுரை கிழக்கு வட்டம் ஒத்தக்கடை ஆகிய இடங்களில் (26.05.2022) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில், தலா ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மைய சேமிப்பு கிட்டங்கியை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

மிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக, விவசாயிகள் நலனை பாதுகாக்கின்ற வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் பணிகளுக்கு தேவையான இடுபொருள் தொழில்நுட்ப வசதி வழங்கிட ஏதுவாக 13 முதன்மை விரிவாக்க மையங்களும், 18 துணை விரிவாக்க மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் தனியார் கட்டடங்களில் செயல்படுதல், பராமரிப்பில்லாத பழைய கட்டடங்களில் செயல்படுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக தலா ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டில் செக்காணூரணி, பாலமேடு, தும்பைப்பட்டி, ஒத்தக்கடை, நாச்சிகுளம் ஆகிய 5 இடங்களில் புதிய துணை வேளாண்மை விரிவாக்க மைய சேமிப்பு கிட்டங்கி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

அதன்படி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில், தும்பைப்பட்டி மற்றும் ஒத்தக்கடை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மைய சேமிப்பு கிட்டங்கிகளை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வின்போது, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகானந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: