கல்விசெய்திகள்

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி

Art gallery performance by students at Thiruvedakam Vivekananda College

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், விவேகா நுண்கலை மன்றம் சார்பில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விவேகா நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள்மாறன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார்.

செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் கலைக்கூடல் நிகழ்ச்சியில் ,தேசபக்தி பாடல் மௌன மொழி நாடகம் மெல்லிசை பாடல் ஒயிலாட்டம் கீபோர்ட் இசை கானா பாடல் பறையாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் சிறப்பாக நடத்தினர்.

மாணவர்கள் ராஜா மற்றும் கமல் தேசபக்தி பாடல் பாடினர். மௌன மொழி நாடகத்தில் ராம்குமார், போதி சத்வவிநாயகம், தனுஷ், பெருமாள், ரத்தினவேல், கதிரவன், ஜீவா, மாணிக்கவாசகர் ஆனந்த் ஆகிய மாணவர்கள் பங்கு பெற்றனர். கேசவன், பீவின்குமர், பிரசன்னா ஆகியோர் ஒயிலாட்டம் ஆடினர்.

மாணிக்கவாசகர், கமல் மற்றும் ராஜா மெல்லிசை பாடல் பாடினர். பிரசன்னா,நீரஞ்சன்குமார் மற்றும் சுதீப் குமார் ஆகியோர் கீபோர்டு இசை வாசித்தனர். கமல் கானா பாடல் பாடினார். மணிகண்டபிரபு பல குரல் மொழி பேசினார். கார்த்திகேயன் அம்மா பாடல் பாடினார். தனுஷ், பிரவீன்குமார், சூர்யா, மதன்குமார், தங்கராம், சுதாகர் நாகேந்திரன் ஆகியோர் பறையாட்டம் ஆடினர்.

மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவர் பெருமாள் நன்றி உரை வழங்கினார். மூன்றாம் ஆண்டு விலங்கியல் துறை மாணவர் ஸ்ரீதேவபாரதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: