ஹலோ மதுரை நேயர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னைக்கு நாம பார்க்கப்போவது, தீயான ஒரு தகவல்தான். இதுலாம் தேவையானு கேட்டீங்கனா… இப்படியும் நடக்குதுன்னு தெரிஞ்சுகனும். அதுக்காகத்தான்.
சரி அப்டி என்னதான் விசயம் ? தங்களுடைய உடம்பில் தீ வைத்துக் கொண்டு வித்தியாசமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியிருக்காங்க ஒரு இளம் காதல் ஜோடி. அடப்பாவிகளா ? அப்டினு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது…
சமீப காலமா திருமண போட்டோ சூட்டிங், வேற வேற மாதிரி எடுத்து நெட்டுல வைரலா தீயா பரவுரத கேள்விபட்டிருப்போம், ஏ… நாமளே பாத்திருப்போம். இந்த ஜோடிங்க அதையும் தாண்டி, தீய…வே உடம்புல வச்சுக்கிடத பத்தி விரிவா பார்ப்போம் வாங்க.
இப்டி பரபரப்ப ஏற்படுத்திய ஹாலிவுட் ஜோடி கேப் ஜெசாப் மற்றும் ஆம்பிர் பாம்பிர் எனும் இளம் காதலர்கள்தான்.. இவர்கள் இருவரும் ஹாலிவுட் சினிமா துறையில ஸ்டண்ட் கலைஞர்கள். இவுங்க இரண்டு பேரும் ஹாலிவுட் படப்பிடிப்பில் ஸ்டண்ட் வேலை செய்யும் போது ஒருவரை ஒருவர் சந்திச்சுருக்காங்க.
முதல் பார்வையிலேயே இருவரும் காதலில் விழுந்திருக்காங்க. அப்புறம் ஒரு வழியாக காதல் கல்யாணம் வரை வந்திருக்கு. சரி, கல்யாணத்தை தாண்டி வரவேற்பு நிகழ்ச்சிய வித்தியாசமா செய்ய நினைச்சு இருக்காங்க… இல்ல… தீய வச்சுருக்காங்கனு சொன்னாத்தான் பொருத்தமா இருக்கும்.
இந்த வீடியோ முதல்ல டிக்டாக்கில்தான் வைரலாகியிருக்கு, இந்த வீடியோவ புகைய வச்சது, இந்த காதல் ஜோடிகளின் திருமண புகைப்படக்காரர் ரஸ் பவல் தான். அந்த கையோடு அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அதே வீடியோவைப் பதிவு செஞ்சு அனைவரின் பார்வையிலும் தீய வச்சுருக்காரு.
வீடியோவில் இந்த ஜோடிகள் தங்களுடைய முதுகின் பின்புக்கம் தீயை பத்தவச்சுக்கிடு வேகமாக நடந்து வருவதை பார்த்தாலே நம்ம மனசுல தீ பத்திக்க தொடங்கிரும். தீ கொளுந்து விட்டு எரிய… அவர்கள் அப்படியே நடந்துவர…. வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் கை தட்டி உற்சாகபடுத்த… அனல் பறக்க வரவேற்ப்பு நடந்தது,
எரியும் நெருப்புக்கிடையே ஜோடி சும்மா ஹாயாக செம லவ்வோட நடந்து வந்து, இரண்டுபேரும் ஒன்னா மண்டியைட்டதும், டக்குனு இருவர் வந்து தீயை அணைக்குறாங்க. அதுக்கப்புரமா ? ஒரே ஜாலிதான். தீயில் ஆரம்பிச்ச வரவேற்பு நிகழ்ச்சி தண்ணீல மூழ்கி மப்போடு முடிஞ்சுருச்சு.
இதுல முக்கியமான விசயம் என்னன்னா… தயவு செஞ்சு இத பார்த்து நீங்களும் இதே மாதிரி டிரை பன்னாதீங்க… ஏன்னா கல்யாணத்துக்கு பிறகு அதுவே கொஞ்சம் கொஞ்சமா பத்திக்கும் அப்டீங்குற தகவலோடு உங்ககிட்ட இருந்து விடை பெறுவது உங்கள் ஹலோ மதுரை ரமேஷ். நன்றி வணக்கம்.