செய்திகள்விபத்து

திருமங்கலம் – விருதுநகர் நான்குவழிச்சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

A truck collided with a two-wheeler on the Thirumangalam-Virudhunagar four-lane road

தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வகுமார் (48)., இவர் தூத்துக்குடியில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். விருதுநகரில் இருந்து திருமங்கலம் நோக்கி தனது சொந்த வேலைக்காக தனது இருசக்கர வாகனத்தில் திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, திருமங்கலம் – விருதுநகர் 4 வழிச்சாலையில் , கள்ளிக்குடி அருகே உள்ள தனியார் பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது., பின்னால் செங்கல் ஏற்றிக்கொண்டு செல்லும் லோடு லாரி ஒன்று விருதுநகர் அருகே செங்கல் கற்களை இறக்கிவிட்டு, மீண்டும் பேரையூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து., முன்னால் சென்ற செல்வகுமார் ஓட்டிய டூவீலர் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த செல்வத்தின் தலை மீதி லாரியின் பின்புற சக்கரம் ஏறி இறங்கியது. அதில் செல்வகுமார் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதனைக் கண்ட ரோந்து பணியில் ஈடுபட்ட கள்ளிக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரமேஷ் பாபு , விபத்தை ஏற்படுத்தி விட்டு பேரையூர் நோக்கி தப்பிக்க முயன்ற ஓட்டுனரை சினிமா பாணியில் அரை கிலோ மீட்டர் தூரம் விரட்டி லாரியை மடக்கிபிடித்தார்.

இதனைத்தொடர்ந்து, லாரி ஓட்டுனரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர் பேரையூர் தாலுகா சாத்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்பு என்பவரது மகன் காளிராஜ் (29) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த சார்பு ஆய்வாளர் லாரியை பறிமுதல் செய்து காளிராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: