குற்றம்செய்திகள்

திருமங்கலம் ரைஸ் மில்லில் பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் | ரைஸ்மில் அதிபர் தலைமறைவு

7 tons of ration rice bags hoarded in Thirumangalam Rice Mill seized Raismill Chancellor absconded

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கீழக்கோட்டைக்கு கிராமத்தில், செந்தில் என்பவருக்கு சொந்தமான ரைஸ் மில் இயங்கி வருகிறது. இந்த ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்துள்ளதாக திருமங்கலம் வட்டாட்சியர் சிவராமனுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில், ஆய்வு செய்த சிவராமன் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கு டன் ரேஷன் அரிசி மூடைகளையும் பறிமுதல் செய்தார். அப்போது ரைஸ்மில் அதிபர் அங்கிருந்து தலைமுறைவானார்.

இதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, உசிலை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அவ்வழியே வந்த மினி லாரியில் ரேஷன் அரிசி பதுக்கி வந்தது தெரிய வந்ததையடுத்து, அதனையும் பறிமுதல் செய்து உணவு பொருள் தடுத்தல் பிரிவு துறையிடம் ஒப்படைத்துள்ளனர். மினி லாரி ஓட்டுநரும் லாரியிலிருந்து தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: