திருமங்கலம் பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 ரொக்க பரிசு

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 ரொக்கத்துடன் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் (05.01.2021) வழங்கி தெரிவிக்கையில்:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.100 ரொக்கத்துடன் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கியது. தற்போது இந்தாண்டு ரூ.2,500 ரொக்கத்துடன் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்குகி வருகின்றது.
ஏழை, எளிய, ஆதரவற்றோர்களுக்கான உதவித்தொகை ரூ.1000 மாதந்தோறும் சுமார் 35,00,000 பேர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கம் வழங்குவது பண்டிகை காலங்களில் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வது போன்றதாகும் என்றார்.
முன்னதாக திருமங்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூர் கிராமம், டி.கல்லுப்பட்டி, எல்.கொட்டாணிபட்டி, எம்.சுப்புலாபுரம், சிலார்பட்டி, பாப்பையாபுரம், சிலைமலைபட்டி, மதிப்பனூர் கிராமம், அலப்பலச்சேரி கிராமம், எஸ்.மீனாட்சிபுரம் கிராமம், டி.புதுப்பட்டி கிராமம், ஆலம்பட்டி கிராமம், சாத்தங்குடி கிராமம், புங்கங்குளம் கிராமம், உரப்பனூர் கிராமம் மற்றும் செக்கானூரணி கிராமம் உள்ளிட்ட இடங்களில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, வருவாய் கோட்டாட்சியர் (திருமங்கலம்) சௌந்தர்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேஸ்வரி, வட்டாட்சியர் (திருமங்கலம்) முத்துப்பாண்டியன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜவேல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.