
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியின் தலைவரான ரம்யாவின் கணவர் முத்துக்குமாருக்கும், முத்துக்குமாரின் சகோதரரும் நகராட்சி 5வது வார்டு திமுக கவுன்சிலரான திருக்குமார் உட்பட நான்கு பேருக்கு கத்தி குத்து ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சேட் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த நால்வரும் காரில் திருமங்கலம் தேநீர் கடையில் நின்று கொண்டிருந்த போது, அவ்வழியே காரில் வந்த மர்ம நபர்கள், எதிர்பாராதமாக தேநீர் அருந்தி கொண்டிருந்த முத்துக்குமார், திருக்குமார், சேட் மற்றும் ஜெகன் ஆகிய நால்வர் மீது கத்தி குத்து நடத்தியதில், சேட் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .
மேலும் மூவருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சேட்க்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை தனியார் மருத்துவமனைக்கும், மற்ற மூவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எதற்காக இவர்கள் மீது கத்திக் குத்து நடைபெற்றது ? முன் விரோதம் காரணமா ? என்ற பல்வேறு கோணத்தில் திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கத்திக்குத்து நடத்திய நபர்களை தேடி வருகின்றனர்.