
மதுரை மாவட்டம் திருமங்கலம்நகராட்சியில் 27 கவுன்சிலர்கள் கலந்து கொண்ட கவுன்சிலருக்கான மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் டெரன்ஸ் லியோன் – ஐ கண்டித்து, அதிமுக, திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியின் போது, நிறைவேற்றப்படாத ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கு என ரூ.22 லட்சம் வரை செலவீடு செய்த மக்களின் வரிப்பணத்தை வீணடித்துள்ளதாக திமுக கவுன்சிலர்கள் குரல் எழுப்பிய போது, அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடும் சலசலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையாளரைக் கண்டித்தும், ஆணையாளர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், நகராட்சி பகுதிகளில் துப்புரவு தொழிலாளர்கள் பணிகள் செய்யாமல், அடிப்படை வசதிகள் செய்யாமல் பணியாளர்கள் பற்றாக்குறை நிலையே தொடர்ந்து வருவதை கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.