அரசியல்செய்திகள்

திருமங்கலம் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் செயல் வீரர்கள் கூட்டம்

A meeting of functionaries at Tirumangalam South District DMK office

மதுரை மாவட்டம் திருமங்கலம் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனையில், பாஜகவில் அண்ணாமலை பேசிவரும் பேச்சுக்களும், தமிழக அரசு மீதும், முதல்வர் மீதும் அவதூறு பரப்பி வரும் பொய் பிரச்சாரங்கள் மற்றும் தவறாக பரப்பும் இணையதளம் மற்றும் வீடியோ வைரல்களை பற்றி திமுகவினர் அஞ்சத் தேவை இல்லை.

மேலும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக அரசின் செயல்பாடுகளையும், முதல்வரின் துரித நடவடிக்கைகளையும் அதே இணையதளம் மற்றும் வீடியோ வைரலாக பதிவு செய்து அனுப்புமாறு திமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அறிவுரை வழங்கினார்.

மேலும் இந்த கூட்டத்தில், வருகிற ஒன்பதாம் தேதி மதுரை வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினை வரவேற்கும் விதமாக, பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் லதா, சாமிநாதன், முத்துராமலிங்கம் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: