திருமங்கலம் சைக்கிள் & பைக் ஸ்டாண்டில் பகல் கொள்ளை | நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்
Day robbery at Thirumangalam bicycle stand | Will the municipal administration take action?

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி கீழ் செயல்படும் பேருந்து நிறுத்தம் பின்புறம் ஒப்பந்த அடிப்படையில் நகராட்சி சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் இருசக்கர வாகனம் திறந்தவெளியில் செயல்பட்டு வருகிறது.
இங்கு மதுரையில் இருந்து தென் மாவட்டம் மாவட்டம் செல்லும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள நகராட்சி வாகன காப்பகத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு செல்வதே வழக்கம்.
நிறுத்தப்படும் வாகனத்திற்கு கொடுக்கப்படும் ரசீது ஐந்து ரூபாய் என குறிப்பிட்டுள்ளது. அதை வைத்து இவர்கள் இஷ்டத்துக்கு பத்து ரூபாய் 12 ரூபாய் என வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையிலேயே நிறுத்துவதால் போதிய பாதுகாப்பு இல்லாமல் மழையிலும் வெயிலிலும் வாகனம் நிற்கிறது சாலையில் நிறுத்துவதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், திருமங்கலம் நகராட்சி பேருந்து நிறுத்தத்தில் போதிய இட வசதி இல்லாமலும், அதிக அளவு கட்டணம் வசூல் பெறுவதாகும், இவர்கள் கொடுக்கும் மற்றும் எவ்வளவு பணம் என எதுவும் குறிப்பிடவில்லை, இது பகல் கொள்ளை என எனவும் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.
இதுகுறித்து திருமங்கலம் நகராட்சி கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என தெரிவித்தார். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா எதிர்பார்ப்புடன் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும்.