
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகானி கிராமத்தில் இயங்கி வந்த ரேஷன் கடை சேதம் அடைந்து இருப்பதால் , சமுதாய கூடத்தில் ஆறு மாதத்திற்கு மேலாக ரேஷன் கடை இயங்கி வருகிறது.
இந்த நிலையில் இன்று ரேஷன் கடையில் சாக்குகள் அடுக்கி வைத்திருந்த அறையில் மின் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது, இந்த தீ மளமளவென எரிந்து கடையினுள் இருந்த அரசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி, அரசின் இலவச வேஷ்டி, சேலைகளும் தீக்கிரையாகின.
இவற்றின் மொத்த மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் என கூறப்படுகிறது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கூடக்கோவில் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து கள்ளிக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கள்ளிக்குடி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து , மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்து உள்ளே இருந்த 2500க்கும் மேற்பட்ட சாக்குகள் மற்றும் ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் பேரல் மற்றும் 100க்கும் மேற்பட்ட இலவச வேஷ்டி சேலைகள் தீக்கிரையானது.