ஆர்ப்பாட்டம்செய்திகள்போலீஸ்

திருமங்கலம் காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் | 30க்கும் மேற்பட்டோர் கைது

Protest in front of Tirumangalam Police Station More than 30 people were arrested

மதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் நிலையம் முன்பு, குறிப்பிட்ட சமூகத்தினர் மீது மட்டும் வழக்கு தொடர்ந்ததாக கூறி, பாதிக்கப்பட்ட சமூகத்தினர் காவல்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நேற்று திருமங்கலம் தெற்கு தெரு பகுதியில் உள்ள கோவில் முன்பு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த (தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மக்கள்) சிலர் மது அருந்தி கொண்டிருந்ததை, மற்றொரு சமூகத்தை (அகமுடையர்) சார்ந்த சிலர் கண்டித்ததால், இருவருக்கும் வாக்கு வாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் இரு சமூகத்தை சார்ந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக அடிதடியில் ஈடுபட்ட ஒரு குறிப்பிட்ட (அகமுடையர்) சமூகத்தைச் சார்ந்த 12 பேரை மட்டும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்டிக்கும் வகையில் பாதிக்கப்பட்ட அகமுடையர் சமூகத்தினர் இரு தரப்பினர் மீதும் வழக்கு தொடுக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட சமூகத்திற்கு ஒரு தலை பட்சமாக காவல்துறை உடந்தையாக செயல்படுவதாக கூறி, காவல்நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரைக் கண்டித்து போராட்டத்தில் திடீரென ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வேனில் ஏற்றி கைது செய்தனர். இதனால் மதுரை – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: