
மதுரை மாவட்டம் திருமங்கலம் கால்நடை மருத்துவமனையில் தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில், விதவைப் பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற ஏழை பெண்கள், உள்ளிட்டோருக்கு நபர் ஒன்றுக்கு 5 ஆடு வீதம் 100 நபர்களுக்கு மொத்தம் 500 விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.
மேலும் ஆடு பராமரிப்பு செலவிற்காக ரூபாய் ஆயிரமும் வழங்கப்பட்டது. இதனை மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.அனிஷ் சேகர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதனை தொடர்ந்து ஆடுகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்பதற்காக ஆடுகளின் நலன் கருதி இரண்டு வருடம் காப்பீட்டு திட்டம் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர்.நடராஜகுமார், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1