செய்திகள்

திருமங்கலம், கள்ளிக்குடி, பேரையூரைச் சார்ந்த பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

Madurai News

மதுரை மாவட்டம்திருமங்கலம், கள்ளிக்குடி, பேரையூர் ஆகிய வட்டங்களை சார்ந்த பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் த.அன்பழகன் தலைமையில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் (20.02.2021) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா மூலம் 510 பயனாளிகளுக்கு ரூ.3,39,33,607ஃ-மதிப்பிலும்,சமூக பாதுகாப்புத் திட்டம் மூலம் 1007 பயனாளிகளுக்கு ரூ.1,20,34,250ஃ- மதிப்பிலும்,இயற்கை இடர்பாடுகளினால் வீடு இடிந்ததற்கான நிவாரணம் மூலம் 50 பயனாளிகளுக்கு ரூ.2,05,000ஃ- மதிப்பிலும்,வேளாண்மைத்துறை சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்; 144 பயனாளிகளுக்கு ரூ.3,22,240 மதிப்பிலும்,

மேலும் தோட்டக்கலைத்துறை; சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.1,32,272 மதிப்பிலும்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் விலையில்லா தையல் இயந்திரம், விலையில்லா சலவைப் பெட்டி வழங்கும் திட்டம் மூலம் 6 பயாளிகளுக்கு ரூ.31089.20 மதிப்பிலும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அம்மா இருசக்கர வாகனத்திட்டம் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.4,00,000 மதிப்பிலும்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ.5,57,595 மதிப்பிலும், கால்நடைத்துறை சார்பில் கால்நடை வளர்ப்புத் திட்டம் மூலம் 197 பயனாளிகளுக்கு ரூ.3,94,000 மதிப்பிலும்,தொழிலாளர் நலத்துறை சார்பில்கட்டுமானப் பணியாளர் வேஷ்டி, சேலை வழங்கும் திட்டம் மூலம் 240 பயனாளிகளுக்கு ரூ.72,000 மதிப்பிலும்.

மேலும், சமூக நலத்துறை சார்பில் திருமண உதவித் தொகை திட்டம் மூலம் 120 பயனாளிகளுக்கு ரூ.52,25,000 மதிப்பிலும் மற்றும் தாலிக்கு தங்க காசு வழங்கும் திட்டம் மூலம் 120 பயனாளிகளுக்கு ரூ.48,00,000 மதிப்பிலும்என மொத்தம் 2689 பயனாளிகளுக்கு ரூ.15,81,07,053.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செந்தில்குமாரி, திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் சௌந்தர்யா, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)புகாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெயசீலி, பேரையூர் வட்டாட்சியர் சாந்தி, கள்ளிக்குடி வட்டாட்சியர் திருமலை, திருமங்கலம் வட்டாட்சியர் முத்துப்பாண்டி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: