செய்திகள்விபத்து

திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்டில் நின்ற லாரி மீது லாரி மோதி ஊழியர் படுகாயம்

A lorry collided with a lorry standing at Thirumangalam Keppur tollgate, an employee was injured

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில், இன்று (21.07.22) அதிகாலை நான்கு மணி அளவில் சுங்கச்சாவடியில் சுங்கவரி கட்டணம் செலுத்த வந்த லாரி, கவுண்டர் முன்பு நின்று கொண்டிருந்தபோது, லாரியின் முன்புறமுள்ள பாஸ்ட் டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்வதற்காக ஊழியர் வண்டி முன்பு வந்து ஸ்கேன் செய்யப்பட்டது.

அப்போது அந்த லாரியின் பின்புறம் உள்ள வண்டி மோதியதில், ஸ்கேன் செய்து கொண்டிருந்த ஊழியர் தினேஷ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளன.

இதில் சுங்கச்சாவடி ஊழியர் தினேஷ் என்பவர் காயமடைந்து, அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Share Now
Back to top button
error: