
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுத் தேர்தலையொட்டி, ஒன்றிய கழகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமங்கலம் ஒன்றிய செயலாளர் தனபாண்டியனுக்கு, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
முன்னதாக திருமங்கலம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, கொ.தன பாண்டியன் மற்றும் முத்துப்பாண்டி, வெற்றி குமார், செளடார் பட்டி செளந்திரபாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தனபாண்டியனுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கும் வகையில், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கி திருமங்கலம் ஒன்றிய திமுகவினர், கொண்டாடி மகிழ்ந்தனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1