செய்திகள்

திருமங்கலம் அருகே 300 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ அய்யனார் கோவிலில் பெட்டி எடுப்பு திருவிழா

Box picking festival at Sri Ayyanar temple near Tirumangalam after 300 years

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள, ஸ்ரீ அய்யனார் கோவில் பழமை வாய்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் 300 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பெட்டி எடுப்பு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பாக முன்னோர்கள் வயது முதிர்வு காரணமாக பெட்டி எடுப்பு திருவிழா நடைபெறாமல் இருந்து வந்ததாக கூறப்பட்டது.

தற்போது அவர்களுடைய வாரிசுதாரர்கள் பொறுப்பு ஏற்று திருக்கோயிலில் 300 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ அய்யனார் கோவிலுக்குச் சொந்தமான சாமியினுடைய அணிகலன்கள் மற்றும் பொருள்கள் அடங்கிய பெட்டிகள், முழு பக்தி மரியாதையுடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, கிராம முக்கிய வீதிகள் வழியாக ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் சாமி ஆடியவாறு வலம் வந்து மீண்டும் திருக்கோயிலை அடைந்தனர்.

இத்திருவிழா காரணமாக கிராமமே விழாக்கோலம் பூண்டது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: