செய்திகள்

திருமங்கலம் அருகே வங்கி சுவர் சரிவு | வங்கி காவலாளி காயம்

Bank wall collapse near Thirumangalam | Bank guard injured

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில், இன்று அதிகாலை வங்கி நுழைவு வாயிலில் உள்ள மேற்புற தாழ்வரச் சுவர் முழுவதுமாக சரிந்துகீழே திடீரென சரிந்து விழுந்தது.

இதில் வங்கி காவலாளி ராமசந்திரனுக்கு காயம் ஏற்பட்டது. இவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வங்கி-யின் கட்டிடம் மிகப்பழமை யான கட்டிடம் என்பதாலும், இருதினங்களாக பெய்த மழையினாலும் தாழ்வாரச் சுவர் முழுவதும் ஈரப்பதம் ஏற்பட்டு வலுவிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இன்று வங்கி வேலைநாள் என்பதால், வாயில் முன்பு சரிந்த தாழ்வார சுவரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அதிகாலையில் ஏற்பட்டது. வங்கி வாடிக்கையாளர்கள் எவரும் வரவில்லை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: