செய்திகள்புகார்

திருமங்கலம் அருகே ரூ.71 லட்சம் செலவில் போடப்பட்ட தார் சாலை | ஒரே மாதத்தில் அப்பளம் போல் பெயர்த்தெடுத்த கிராமமக்கள்

Tarred road laid near Tirumangalam at a cost of Rs.71 lakh | Villagers migrated like waffles in one month

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்து கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எஸ். வெள்ளா குளம் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, ரூபாய் 71 லட்சம் செலவில் கிராமத்தில் உள்ள மயானத்தில் இருந்து எஸ் .கல்லுப்பட்டி வரை 1.400 கிலோ மீட்டர் தொலைவில் தார் சாலை போடப்பட்டு, ஒரு மாதத்திற்குள் அப்பளம் போல் தார் சாலைகளை கிராம மக்கள் கையில் பெயர்த்தெடுத்து காண்பிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது.

மேலும் இப்பணிகள் 2019-20 ஆண்டு வரை உள்ள திட்ட பணிகளுக்கான வேலை என்பதை, அப்பணிகளை கடந்த ஒரு மாதத்திற்குள் முடித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணி நிறைவு செய்துள்ளதாக விளம்பர பலகையில் வைத்துள்ளது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரூபாய் 71 லட்சம் செலவில் போடப்பட்ட தார் சாலை அப்பளம் போல் பெயர்த்திடும் அளவிற்கு உள்ளதை அறிந்த கிராம மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து , தங்களுடைய கிராமத்திற்கு தரமான புதிய சாலை அமைக்க வேண்டி கேட்டுக் கொண்டனர். இல்லை என்றால் கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: