
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தும்மக் குண்டு அருகே உள்ள, டி.புதுப்பட்டி கிராமத்தைச் சார்ந்த தர்மராஜ் – ஆண்டாள் தம்பதியின் இரட்டை குழந்தைகளின் இளைய மகன் லட்சுமணன், கடந்த 2019 ஆம் ஆண்டு பிகாம் பட்டம் பெற்று, அன்றைய ஆண்டே ராணுவத்தில் சேர்ந்தார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் -ல் நடைபெற்ற தீவிரவாதிகளுக் கிடையே நிகழ்ந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வீர மரணம் அடைந்ததை அறிந்த பெற்றோர் மற்றும் சகோதரர் கண்ணீர் மல்க அழுததுடன், நாட்டுக்காக உயிர் நீத்த தனது பிள்ளையை எண்ணி பெற்றோர்கள் பெருமை அடைந்துள்ளனர்.
லட்சுமணனின் சகோதரர் ராமர் பிகாம் பட்டம் பெற்று, அதே கிராமத்தில் விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவருக்கு வீர மரணம் தொடர்பாக டி புதுப்பட்டி கிராமமே லட்சுமணன் இல்லத்தில் ஒன்றுகூடி சோகத்துடன் உள்ளனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1