
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகாவில் உள்ள எம்.சுப்புலாபுரம் கிராமத்தைச் சார்ந்த 26 வயது இளைஞர் பாலாஜி, இவருக்கு தர்ஷினி என்பவருடன் திருமணமாகி 2 வயதில் மகன் உள்ளான். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறிய பாலாஜி மாயமாகவே, அவரது மனைவி தர்ஷினி டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் இன்று, பேரையூர் அருகே உள்ள சிட்டுலொட்டிபட்டி கிராமத்தில் உள்ள கிணற்றில், சாக்கு பையில் முகம் மற்றும் பாதி உடலையும் கட்டியதுடன், கை, கால்களையும் கட்டியபடி பிணமாக பாலாஜி மிதக்கவே, இதனை அறிந்த பேரையூர் போலீசார் அதிர்ச்சியடைந்து, கள்ளிக்குடி தீயணைப்புத்துறையினரால் பாலாஜி உடலை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பாலாஜியை கொடூரமாக கொலை செய்தது யார் ? எதற்காக ? ஏன் ? என பேரையூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பாலாஜி திமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.