
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராயபாளையம் மற்றும் மேலக்கோட்டை ஆகிய இரு வெவ்வேறு இடங்களில் ஐந்து வயதான மான்கள் விபத்தில் சிக்கியது. இதில் பெண் மான் உயிரிழந்தது, ஆண் மகன் படுகாயம் அடைந்துள்ளது.
ராயபாளையம் கிராமத்தில் தண்ணீர் தேடி வந்த நான்கு வயது ஆண் மான் அங்குள்ள நாய்களின் பிடியில் சிக்கி, நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த மான் சோர்வுடன் மயங்கியது. இதனை அறிந்த கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதேபோன்று மேலக் கோட்டையில் உணவு தேடி வந்த ஐந்து வயதுமிக்க பெண் மான், சாலையை கடக்க முற்படும்போது வாகனம் மோதி உயிரிழந்தது. சம்பவம் குறித்து வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.
மேலும் காயமடைந்த ராயபாளையம் கிராமத்தில் சிக்கிய புள்ளி மானை சிகிச்சைக்காக வனத்துறையினர் எடுத்துச் சென்றனர். இப்பகுதியில் அடிக்கடி நிகழும் மான்களின் உயிரிழப்பால் கிராம மக்கள் மான்களை காக்க வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.