
திருமங்கலம் அருகே ரூ.25 லட்சம் செலவில் குறும்பாலம் அமைக்கும் பணிக்காக பிரம்மாண்ட பள்ளமாக தோண்டப்பட்ட சாலை – இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பணி துவங்கப்படாததால் வாகனங்கள் மற்றும் கிராம மக்கள் இரவு நேரங்களில் பள்ளங்களில் விழுந்து விபத்துக்கள் நிகழும் அபாயம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சேடப்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே, ரூ.25 லட்சம் செலவில் நெடுஞ்சாலை துறை சார்பில் சிறு குறும்பாலம்அமைக்கும் பணிக்காக , கடந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பிரம்மாண்ட பள்ளம் அத்துடன் நிறைவுற்றது.
தொடர்ந்து குறும்பாலம் அமைப்பதற்கான பணி துவக்கப்படாததால், பிரம்மாண்ட பள்ளத்தில் அவ்வழியை செல்லும் நான்கு சக்கர , இரு சக்கர வாகனங்கள் முதல் நடந்து செல்லும் கிராம மக்களும் , இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாத காரணத்தினால் பள்ளத்தில் விழுந்து காயம் ஏற்படுகிறது.
இதுபோல் அடிக்கடி விபத்துக்கள் நிகழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி வாசிகள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சாலையின் வழியாக 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருப்பதால், நெடுஞ்சாலை துறையினர் விரைந்து பணியினை முடித்து உயிர்ப்பலி ஏற்படும் முன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.