செய்திகள்
திருமங்கலம் அருகே கரிசல்பட்டி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்
Free medical camp at Karisalpatti village near Thirumangalam

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரிசல்பட்டி கிராமத்தில், ஊராட்சி நிர்வாகமும், தனியார் மருத்துவமனையின் தொண்டு நிறுவனமும் இணைந்து, கிராமத்தில் இலவச மருத்துவ முகாமை நடத்தினர்.
இம்முகாமில் முதியோர்கள் மற்றும் மாற்றத்திறனாளிகள் உட்பட கிராமத்தில் உள்ள அனைவரும் தங்களது உடலை பரிசோதனை செய்து, அதற்கான சிகிச்சையும் பெற்று, மருந்து மற்றும் மாத்திரைகளையும் இலவசமாக பெற்றுச் சென்று பயன் பெற்றனர்.சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு, தோல் நோய் உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1