
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நல்ல மரம் பஞ்சாயத்துக்குட்பட்ட முத்துலிங்காபுரம் கிராமத்தில், ஊராட்சி மன்ற மூன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்து முடிந்ததை ஒட்டி, அதில் பதிவான 129 வாக்குகளை டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்த வாக்கு எண்ணிக்கையில் 10 வாக்குகள் செல்லாத வாக்குகளாக கூறப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 119 வாக்குகளில் சுரேஷ்குமார் என்பவர் 69 வாக்குகள் பெற்று 17 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஆசிக், வெற்றிச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
வேட்பாளர் சுரேஷ்குமார் நிருபர்களிடம் அளித்த பேட்டியில், தனது வார்டில் அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் செய்து முடிப்பதாக உறுதி அளித்தார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1