
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அங்கன்வாடி மையத்தில், சமையலறை கூடம் மேற்புற சுவர் அனைத்தும் இடிந்து பெயர்ந்து கீழே விழுந்ததால், அங்கன்வாடி மையத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சமையலறை கட்டிடம் இன்றி வகுப்பறைக்குள் சமையல் செய்யும் நிலையும், சமையல் பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பு இன்றி உள்ளது.
மேலும் அந்த கட்டிடத்தை சுற்றி முட்புதர்கள் உள்ளதால், கொடிய விஷம் உள்ள பாம்புகள் நடமாடுவதால், அங்கன்வாடி மையத்திற்குள் நுழைந்து பீதியை கிளப்புவதுடன், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கும், இங்கு சிகிச்சை பெற வரும் கர்ப்பிணி பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால், அச்சத்தில் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தவுடன், கிராம மக்களின் நலன் கருதி புதிய கட்டிட அங்கன்வாடி மையம் அமைப்பதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனவே உரிய அதிகாரிகள் இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு, உடனடியாக புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைத்துக் கொடுத்து, அங்கிருப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.