
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 1 முடித்த 415 மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்துகொண்டார்.
திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், +1 முடிந்து +2 பயிலும் 415 மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில், புதிய சைக்கிள் 415 – ஐ மாணவிகளுக்கு திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் வழங்கினார்.
விழாவில், நகராட்சி துணை தலைவர் ஆதவன் அதியமான், கவுன்சிலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1