திருமங்கலத்தில் ரூ.10.86 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
Construction of integrated bus station at Tirumangalam at a cost of Rs.10.86 crore is in full swing

திருமங்கலத்தில் ரூ.10.86 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பழைய பேருந்து நிலையத்தை முழுவதுமாக இடித்து, அதே இடத்தில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ரூபாய் 10. 86 கோடி செலவில் கட்டுவதற்கான பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், தற்காலிகமாக இப்பேருந்து நிலையத்தை அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இயக்குவதற்கான நடவடிக்கையை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனுடைய தற்காலிக பேருந்து நிலையத்தினால், எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கலந்தாய்வு கூட்டம், நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் , நகராட்சி அதிகாரிகள் ஆகியோரின் முன்னிலையில், நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தற்காலிகமாக இயக்கப்பட உள்ளபேருந்து நிலைய இடமான, ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மைதானத்தை பார்வையிட்டனர்.