செய்திகள்விருது | விழா | கூட்டம்

திருமங்கலத்தில் ரூ.1.86 லட்சம் செலவில் புதிய நவீன நூலகம் அமைக்க பூமி பூஜை

Bhumi Pooja to build a new modern library at a cost of Rs.1.86 lakh in Tirumangalam

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த நூலகத்தின் கட்டிடம் மிகுந்த சேதம் அடைந்து, விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் அருகாமையிலேயே பழைய செயல்படாத காய்கறி வளாகம் பழுதான நிலையில் இருந்தது. எனேவ இக்கட்டிடங்களை முழுமையாக இடித்து தகர்க்கப்பட்டது.

அந்த இடத்தில் ரூபாய் 1.86 லட்சம் செலவில், புதிய நவீன நூலகம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று (04.08.22) நடைபெற்றது. இதனை நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் துவக்கி வைத்தார்.

இப்புதிய நூலகம் அமைப்பதற்கான பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது. பூமி பூஜை நிகழ்வில் நகராட்சி துணைத்தலைவர் ஆதவன் அதியமான், கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் ஏராளமான கலந்து கொண்டனர். துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: