செய்திகள்புகார்

திருமங்கலத்தில் டிப்பர் லாரிகளை சிறை பிடித்து போராட்டம் | தார்சாலை தேசமடைவதால் பொதுமக்கள் ஆத்திரம்

Tirumangalam arrests tipper trucks and protest | Public outrage over nationalization of Darsala

கடந்த ஒரு காலமாக டிப்பர் லாரிகள் அதிக அளவில் சல்லி, மண்களை ஏற்றிக்கொண்டு 20 அடி சாலையில் , மின்னல் வேகத்தில் செல்வதால் சாலைகள் சேதம் அடைந்து வருவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் என குற்றச்சாட்டு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் – விமான நிலைய சாலையில் காமராஜபுரம் வடபகுதியில், ரயில்வே பணிக்காக கொட்டப்பட்டுள்ள சணல், மண் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்வதற்காக 50க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் நாள்தோறும் வந்து செல்வதால், அப்பகுதியில் போடப்பட்டுள்ள தார் சாலை முழுவதும் சேதம் அடைந்து வீணாகி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர் அப்பகுதி பொதுமக்கள்.

மேலும், லாரிகளில் அதிக அளவில் சணல், மண்களை ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் 20 அடி சாலையை கடந்து செல்வதால், விபத்துக்கள் நிகழும் அபாயம் ஏற்படுவது உடன், சாலைகளை சேதப்படுத்தி மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இப்பகுதியில் டிப்பர் லாரிகளை இனி அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியும், சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைத்து தரவும், டிப்பர் லாரியை சிறை பிடித்து சாலையில் அமர்ந்து போராட்டில் ஈடுபட்டனர். அதன் பிறகு டிப்பர் லாரியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, டிப்பர் லாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: