
மதுரை மாவட்டம் திருமங்கலம் பெரிய கடை வீதியைச் சேர்ந்த செல்வி என்பவர் வீட்டில், முத்து கருப்பு தேவர் வயது 80. இவர் அதே பகுதியில் நெல் கமிஷன் வியாபாரம் செய்து வருகிறார். வயது மூப்பு காரணமாக பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றின் அருகே சென்ற பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த அங்குள்ள பொதுமக்கள் உடனடியாக திருமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு கிணற்றில் சிக்கி இருந்த முத்து கருப்பு தேவரை பத்திரமாக உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்களின் செயல்பாட்டால் எவ்வித காயம் இன்றி முதியவர் மீட்பது அப்பகுதி மக்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றது.