
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் உள்ள ஜவகர் நகர் 12வது தெருவில் வசிக்கும், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை மணிமேகலையின் வீட்டின் பூட்டை உடைத்து 21 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை மணிமேகலை, தனது இரு மகன்களுடன் வீட்டில் வசித்து வந்த நிலையில் , கடந்து இரு தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனரங.
இந்நிலையில் இன்று காலை வீட்டு பணிப்பெண் வீட்டை பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டும், பீரோவில் இருந்து பொருட்கள் சிதறி இருந்ததை கண்டு, மணிமேகலைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1