செய்திகள்

திருப்பாலையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள்

Special pujas at Sri Sri Krishna Balarama temple on the occasion of Krishna Jayanti at Tirupala

கிருஷ்ணா ஜெயந்தி ஆனது ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகினி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

மகாபாரதத்தில் மகாவிஷ்ணு அவதாரத்தில் கிருஷ்ணன் அவதாரம் ஒன்றாக கருதப்படுகிறது அதனால் கிருஷ்ணன் பிறந்த நாளான இன்று கிருஷ்ணர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பலராமர் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மல்லிகைப்பூ, பிச்சிப்பூ போன்றவைகளால் கிருஷ்ணர் மற்றும் பலராமர் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிருஷ்ணர், பலராமரை மனமுருக வழிபட்டனர்.

குறிப்பாக குழந்தைகள் பலரும் கிருஷ்ணா ராதை வேடம் பூண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்றது பொதுமக்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: