திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (26) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்
A special grievance redressal meeting for the differently abled will be held at Tiruparangunram District Collector's office tomorrow (26).

திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் 26-08-2022 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயனடையலாம்.
திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் 26-08-2022 அன்று பிற்பகல் 02-00 மணியளவில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு துறை சார்நத நலத்திட்ட உதவிகள், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி போன்ற உதவி உபகரணங்கள் மற்றும் மாதாந்திர உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் பெறும் பொருட்டு விண்ணப்பங்கள் வழங்கிடலாம்.
எனவே மேற்கண்டவாறு நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அந்தந்த வருவாய் வட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கை மனுக்களுடன் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவ அடையாள அட்டையின் நகல், ஆதார் அட்டை நகல், மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1 ஆகியவற்றுடன் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் நேரில் வழங்கி பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.