
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ராஜீவ் காந்தி நகர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்துவருகிறார். இவரது மகன் ராஜ்குமார் ( வயது 29). இவர் மதுரை மாநகர் காவல் துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று நள்ளிரவு 2 மணியளவில் வீட்டின் வாசலில் திடீரென வெளிச்சமாக தெரிந்ததையடுத்து. வீட்டின் கதவை திறந்து பார்த்த போது வாசலில் இருந்த பைக் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது.
உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பைக்கை தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் சுந்தரி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
காவல் துறையில் பணிபுரியும் காவலர் பைக்கை தீ வைத்து எரித்தது குறித்து இப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.