செய்திகள்புகார்

இருளில் மூழ்கி தவிக்கும் திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்க பாதை | மின் விளக்கு பழுதால் இரவில் பரிதவிக்கும் பொதுமக்கள்

Tiruparangunram railway tunnel electric light repair for one month Negligence of Councillor, Corporation

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப் பாதையானது, தியாகராஜா கல்லூரி மற்றும் ஆவணியாபுரம் தென்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சுரங்கப்பாதை ஆகும். இது கடந்த 20 நாட்களுக்கு மேலாக சுரங்கப்பாதையில் உள்ள தெரு விளக்குகள் எரியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மற்றும் கவுன்சிலர் புகார் தெரிவிக்கும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் ஏதேனும் இருட்டினை பயன்படுத்தி செயின் பறிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவார்கள் என ஐயத்தில் உயிரை பனையம் வைத்து ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கிறோம்.

மேலும் இங்கு படிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள் பயத்துடனே செல்ல வேண்டியிருப்பதால் கல்லூரி மாணவர்கள் மற்றும் பாதசாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் சுத்தி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. எப்போது எங்களுக்கு விடியல் கிடைக்கும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மின்விளக்கு ஒப்பந்த நிறுவனங்கள் சுரங்கப்பாதையில் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் தெரு விளக்கு எரிய ஆவணம் செய்ய வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்கள் அனைவரின் கோரிக்கை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: