செய்திகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் லட்சுமி தீர்த்தம் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் சோகம்

Thiruparankundram Murugan Temple

மதுரை, பிப்,02 / 2022

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ளே அமைந்துள்ளது லட்சுமி தீர்த்தம் தெப்பக்குளம்.
இந்த குளமானது தெய்வானை அம்மன் நீராடுவதற்காக கட்டப்பட்ட குளம் என கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக லட்சுமி தீர்த்த குளத்தின் சுற்றுச் சுவர்கள் மிகுந்த பலவீனமடைந்து இடியும் தருவாயில் இருந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு 1முன்பாக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக திருப்பரங்குன்றம் கோவில் வளாகத்தில் உள்ள லட்சுமி தீர்த்த தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் மண்ணரிப்பு ஏற்பட்டு இரண்டு இடங்களில் இடிந்து விழுந்துள்ளது.

தெப்பக் குளத்தை சுற்றி பொதுமக்கள் தங்கியிருப்பதால் தங்களது வீடுகளும் பாதிப்படையும் என்றும், அருகில் ஆரம்பப் பள்ளியில் செயல்பட்டு வருவதால் மிகுந்த அச்சத்தில் அப்பகுதி மக்கள் இருப்பதாகவும், உடனடியாக அறநிலை துறை அதிகாரிகள் கவனத்தில் எடுத்து இதை சரி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கைவில்லை

இந்த நிலையில் மீண்டும் காலை ஒன்பது முப்பது மணி அளவில் லட்சுமி தீர்த்தத்தில் மேற்குப்பகுதி மூளையில் உள்ள ஒரு பகுதியானது திடீரென மளமளவென சரிந்தது யாருக்குத் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்; புனிதமான தீர்த்தமாக கருதப்படும் லட்சுமி தீர்த்தத்தை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், கோவில் நிர்வாகமும் இந்து சமய அறநிலையத் துறையும் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும், இங்கு வாழ்ந்து வந்த சுமார் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து போனது வருத்தம் அளிப்பதாகவும் தெிவி்தனர்.

மேலும் உடனடியாக லட்சுமி தீர்த்தத்தை சீர்செய்து புண்ணிய நதிகளில் இருந்து நீரை எடுத்து வந்து நீர்களை இதோடு கலந்து நீரின் ஆதாரத்தை பெருக்க வேண்டும் எனவும், மீன்கள் வளர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
20
+1
0
+1
0
+1
0
+1
0
+1
25
+1
17

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: