
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு சாமி கும்பிட வருகை தந்த முதியவர் திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூரில் சாமி கும்பிடும் பொழுது கால் இடறி கீழே விழுந்து உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையை சேர்ந்த வலையம்பட்டி சிவன் காலணியை சேர்ந்தவர் சங்கரமூர்த்தி (52) இவர் நேற்று முன் தினம் ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார்.
சாமி கும்பிட வந்தவர் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார் பகுதியை சேர்ந்தவர் அப்போது கால் தடுமாறி கீழே விழுந்தால் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனைத்தொடர்ந்து நேற்று மலை மீது உள்ள கோயிலுக்கு சென்ற பக்தர்கள் ஒருவர் மரணமடைந்த நிலையில் கிடந்ததை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மரனமடைந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.