திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரியில் அபாகஸ் மண்டல தேர்வுகள் | 1500 மாணவர்கள் பங்கேற்பு
Abacus Zonal Exams at Thiruparangunram King College | 1500 students participated

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரியில் தென் மாவட்ட அளவிலான மாணவர்களுக்கு கணித திறனை வளர்த்துக் கொள்ளும் அபாகஸ் பயிற்சி தேர்வுகள் நடைபெற்றது.
இதில் திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இருந்து ஆயிரத்தி 500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பிரைன் ஒ பிரைன் பயிற்சி மையம் சார்பில் 3 வயது மாணவர்கள் முதல் 14 வயது மாணவர்கள் பங்குபெற 10 பிரிவுகளில் நடைபெற்ற அபாகஸ் தேர்வில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை, மன வலிமை, தனித்திறமையை வளர்த்துக் கொள்ளவும். எளிய மற்றும் விரைவாக கணித தேர்வில் வெற்றிபெற 45 நாட்கள் பயிற்ச்சி அளிக்கப்பட்டது.
மண்டல அளவிலான தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலும் பின்னர் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கு பெற முதல் கட்ட தேர்வுகள் மதுரையில் மண்டல அளவில் நடைபெற்றது.