திருப்பரங்குன்றம் பகுதி வளர்ச்சித் திட்டப் பணிகள்; மாநகராட்சி ஆணையர் ஆய்வு
Madurai Corporation News

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4க்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆணையாளர் ச.விசாகன்(10.12.2020) ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 திருப்பரங்குன்றம் ரவுண்டானாவில் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தூய்மை நினைவிடம் திட்டத்தின் கீழ் மயில் சிலை கட்டப்பட்டுள்ள பணிகள் ஆகியவற்றையும்.
மேலும், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை சுற்றி கிரிவலம் செல்லும் பொது மக்களின் வசதிக்காக கிரிவல பாதையான சுமார் 2.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் இருபுறத்திலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் நடைபாதையும், ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினை பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை அருகில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் புதிய சலவைக்கூடம் மற்றும் குளியலறைகள் கட்டுமான பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கப்பட்ட பகுதிகளான விளாங்குடி மற்றும் ஆனையூர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வரும் பாதாள சாக்கடை பணிகளையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் நகரப்பொறியாளர் அரசு, கண்காணிப்பு பொறியாளர் சுகந்தி, செயற்பொறியாளர் கருப்பாத்தாள், உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கியசேவியர், முருகேசபாண்டியன், உதவிப் பொறியாளர்கள் முருகன், மணியன், முத்து ராமலிங்கம், காமராஜ், பாலகுருநாதன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.