செய்திகள்போலீஸ்

திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் வெள்ளத்தில் மீட்பது குறித்த ஒத்திகைப் பயிற்சி

Tiruparangunram Tenkal Kanmail flood rescue exercise

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் பருவமழையில் வெள்ளத்தில் பாதிக்கப் படுபவர்களை மீட்பது குறித்த ஒத்திகைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் பகுதியில் நடைபெற்ற ஒத்திகைப் பயிற்சி நிகழ்ச்சிக்கு திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா தலைமை வகித்தார். மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் சுவிதாவிமல், வட்டாட்சியர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ஜெ.உதயகுமார், கண்ணன் ஆகியோர் தலைமையில் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்பதுகுறித்து ஒத்திகை பயிற்சி செய்தனர்.

மேலும் மழைவெள்ளம் காலத்தில் நீச்சல் தெரியாதவர்கள் ஆற்றிலும், குளத்திலும் குளிப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ள காலி பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்கள் மற்றும் காலி கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தி தண்ணீரில் மூழ்காமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

மேலும் மீட்புப்பணிக்காக தற்போது பயன்படுத்தப்படும் நவீன கருவிகள் குறித்தும், அவை செயல்படும் விதம் குறித்தும் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுந்தரமூர்த்தி, பணிஆய்வர் வரதமுனீஸ்வரன், வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி, சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, கால்நடைத்துறை, மின்வாரியதுறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச்சேர்ந்த அலுவலர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: