திருப்பரங்குன்றம் ஜெ.ஜெ. நகரில் பழங்குடி தின விழா
Tiruparangunram J.J. Tribal Day celebration in the city

திருப்பரங்குன்றம் ஜெ.ஜெ. நகரில் பழங்குடி தின விழா நடைபெற்றது. இதில் திருமங்கலம் வருவாய் கோட்டச்சியர் அபிநயா, மதுரை உயர் மாவட்ட பேராயர் அந்தோணி பப்பு சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஜே ஜே நகரில் அகில உலக பழங்குடி தின விழா கொண்டாடப்பட்டது. மேலும் இந்தியாவின் ஜனாதிபதியாக பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்மு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக விழா நடைபெற்றது.
விழாவில் திருமங்கலம் வருவாய் கோட்டச்சியர் அபிநயா, மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பப்பு சாமி, மற்றும் SC ST அலுவலர் கோட்டூர் சாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஆதிவாசிகள் நடனம், பழங்குடியினர் நடனம், பூம்பூம் மாடு, குடு குடுப்பை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை டிஇஎன்டி சொசைட்டி மகேஸ்வரி ஏற்பாடு செய்திருந்தார். காட்டு நாயக்கன் சமுகத் தலைவர் முருகன் நன்றி கூறினார்.