திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் குளிக்க, துவைக்க தடை | பொதுமக்கள் போராட்டம்
Bathing and washing prohibited in Tiruparangunram Saravana Poikai Public protest

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிக்கு சொந்தமான சரவணப்பொய்கையில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி நீராடுவது வழக்கம்.
இந்தநிலையில் உள்ளூர் மக்களும் துணி துவைக்கவும், குளிக்கவும் இதனை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தனர்.
திருப்பரங்குன்றம் பகுதி பொதுமக்கள் தங்களது துணிகளை துவைக்கவும், குளிக்கவும் குளத்தில் ஷாம்பூ, சோப்பு போன்ற ரசாயன பொருட்களை பயன்படுத்துவதால் தண்ணீர் மாசடைந்து மீன்கள் இறந்தன. இதனால் நீர் கடின தன்மையடைகிறது .
இதையடுத்து கோயில் சரவண பொய்கையில் பொதுமக்கள் துணி துவைப்பதை தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு மூடப்பட்டது.
ஆனால். அப்பகுதியில் பொதுமக்கள் மூடப்பட்டிருக்கும் குளத்தை மீண்டும் துணி துவைக்கவும், குளிக்கவும் வழி செய்ய வேண்டும் என கூறி சரவண பொய்கை அருகே 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.