செய்திகள்போலீஸ்

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் முதியவர் மூழ்கி மரணம்

Old man drowned in Tiruparangunram Saravana Poikai

மதுரை DRO காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் வெங்கடேசன். 62 வயதான இவர் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள மேல கோபுரம் வாசல் பகுதியில் கண்ணாடிக் கடையில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இந்தநிலையில்., வெங்கடேசன் இன்று காலை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு பாத்தியப்பட்ட சரவணப் பொய்கையில் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது வெங்கடேசன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் படி காவல்துறையினர், மதுரை டவுன் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மோட்டார் வாகன நிலைய அலுவலர் கண்ணன் தலை மேலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் அரை மணி நேரம் தேடுதலுக்குப் பின் குளத்திலிருந்து இறந்த நிலை வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இது குறித்து, திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் தற்கொலை செய்து கொண்டாரா ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: