
மதுரை திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மதுரை டவுன் நிலைய அலுவலர் உதயகுமார் மற்றும் நிலைய மோட்டார் வாகன அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் கோவில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீ தடுப்பு குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பணியாற்றும் பணியாளர்கள் முதல் ஊழியர்கள் வரை கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாள வேண்டும், தீயணைப்பான் கருவியை எப்படி பயன்படுத்த வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன மேற்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு மற்றும் பயிற்சி ஒத்திகை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையாளர் ரமேஷ் கலந்து கொண்டு பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தனர். இதுகுறித்து கோயில் ஊழியர்கள் கூறுகையில். இந்நிகழ்வானது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனவும், தீ விபத்து ஏதும் ஏற்பட்டால் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மற்றும் கையாளுவது எனவும் மிகவும் சிறப்பாக விளக்கம் தீயணைப்பு துறையினர் அளித்தனர் என தெரிவித்தனர்.