ஆன்மீகம்செய்திகள்

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியல் | ரூ.32,65,474 ரொக்கம் 192 கிராம் தங்கம் | 1 கிலோ 914 கிராம் வெள்ளி

Thiruparamkundram Undiyal | Rs.32,65,474 cash 192 grams gold | 1 kg 914 g silver

தமிழ் கடவுள் முருகனின்ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 32லட்சத்து 65 ஆயிரத்து 474 ரொக்கமாகவும், தங்கம் 192 கிராம், வெள்ளி 1 கிலோ 914 கிராம் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம் இந்த நிலையில் வைகாசி மாதத்திற்கான உண்டியல் இன்று திறந்து எண்ணப்பட்டது. அதில் பணம் ரூ.32 லட்சத்து, 65 ஆயிரத்து 474 ரூபாய், தங்கம் 192 கிராம், வெள்ளி 1 கிலோ 914 கிராம் இருந்தது.

இதில் திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் சுமேஷ் முன்னிலையில்ன ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், ஐய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now
Back to top button
error: