
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் வரும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில் மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா என்சிசி மாணவர்கள் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பாக காலை 9:30 மணி அளவில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
பேரணியை பள்ளியின் முதல்வர் ஜெரால்ட் துவக்கிவைத்தார். பள்ளியின் தேசிய மாணவர் படை அதிகாரி அமுதா தலைமை தாங்கி நடத்தினர். இந்த பேரணியை திருப்பரங்குன்றம் பகுதி முக்கிய வீதிகள் வழியாக சென்றதை மக்கள் கண்டு களித்தனர்.
பேரணியின் முடிவில் திருப்பரங்குன்றம் பகுதி மக்களுக்கு தேசியக்கொடி வினியோகம் செய்யப்பட்டது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1