செய்திகள்போலீஸ்

திருப்பரங்குன்றம் அருகே 1200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது | ரேஷன் கடை ஊழியர்கள் தலைமறைவு

4 persons arrested for smuggling 1200 kg of ration rice near Tiruparangunram Ration shop employees absconding

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக குடிமை பொருள் வழங்கல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருப்பரங்குன்றம் திருமலையூர் சாலை அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், 50 கிலோ எடை கொண்ட 24 மூடைகளில் 1200 கிலோ ஒரு ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது.

தொடர்ந்த அவர்களிடம் குடிமை பொருள் வழங்கல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், மதுரையைச் சேர்ந்த சாதிக், ஆறுமுகம், பாண்டி, கார்த்திகேயன், ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, கடத்தலுக்கு உடந்தையாக இருந்த திருப்பரங்குன்றம் ரேஷன் கடை விற்பனையாளர் விநாயகம் மற்றும் செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
https://www.hellomadurai.in/wp-content/uploads/2022/09/547.mp4
Back to top button
error: